என்ன பண்றீங்க.. ரோஹித்தால் கடுப்பான ரிஷப் பந்த் - கடைசியில்..?
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.
பந்த் காட்டம்
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் வீசிய பந்து ரோசோவ் காலில் பட்டு சென்றது. இதனை பந்த் பேட்டில் பட்டது என்று ரோஹித் ஷர்மாவிடம் கூறினார்.
ரோஹித் மற்றும் உமேஷ் இருவருமே காலில் பட்டது என்று கூறிய போதிலும், அவர் ‘பேட் லகா தா’ என்று கத்தியது அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது. பந்த் கேப்டன் ரோஹித் சர்மாவை ரிவியூ எடுக்க சொல்லி வற்புறுத்தினார்.
ரோஹித் உறுதி
இருப்பினும், பந்து காலில் தான் பட்டது என்று ரோஹித் உறுதியாக இருந்ததால் ரிவியூ எடுக்காமல் இருந்தார். உமேஷ் யாதவ்வும் தனது காலைச் சுட்டி உறுதிப்படுத்தினார். இதனால் பந்த் ஏமாற்றமடைந்தார்,
— Richard (@Richard10719932) October 4, 2022
ரீபிளேயில் ரோஹித் மற்றும் உமேஷ் சரியா முடிவை தான் எடுத்தனர் என்பது உறுதியானது. ரோஸ்ஸௌவ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். அவர் 0 ரன்னில் இருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றது.
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பவுலர்களின் மோசமான பந்து வீச்சினால் இந்திய அணி தோல்வி அடைந்தது.