‘’ நான் வந்துட்டேன்னு சொல்லு “ : மீண்டும் பயிற்சிக்கு திரும்பிய ரோகித் சர்மா
இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா 5-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. போட்டிக்கு முன்பாக பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடியது. அப்போது ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
கொரோனா ரோகித்
இதனால் ரோஹித் சர்மா தனிமைப்படுத்திக்கொண்டார் , ஆகவே இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக வேகபந்து வீச்சாளர் பும்ரா நியமிக்கப்பட்ட நிலையில் அவர் தலமையில் இந்திய அணி 5 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
இந்த நிலையில் 3-வது ஆட்டத்தின் முடிவில் ரோகித் சர்மாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது, அப்போது அவருக்கு கொரோனா இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெளிவானது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார்.
களத்தில் இறங்கிய ரோகித்
அதனால் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் இந்திய அணி 5-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.
.@ImRo45 - out and about in the nets! ? ?
— BCCI (@BCCI) July 4, 2022
Gearing up for some white-ball cricket. ? ?#TeamIndia | #ENGvIND pic.twitter.com/nogTRPhr9a
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரோகித் சர்மாவுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா இல்லை என முடிவானது. இதனையடுத்து ரோகித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதனை பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியை தொடர்ந்து ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் இங்கிலாந்தில் விளையாடுவதால் அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
" உன் வாயை மூடிகிட்டு பேட்டிங் பண்ணு , மைதானத்தில் கடுப்பான விராட்கோலி : நடந்தது என்ன?