உலகக்கோப்பையை கொடுத்த மைதானம் - புற்களை பறித்து சுவைத்த கேப்டன் ரோகித்!!

Karthick
in கிரிக்கெட்Report this article
வெற்றி களிப்பில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, மைதான புற்களை புடிங்கி தின்றுள்ளார்.
இந்தியா வெற்றி
கொண்டாட்டங்கள் இன்று முடியவில்லை. 17 ஆண்டுகள் கழித்து இந்திய அணி டி20 உலகக்கோப்பையையும், 13 ஆண்டுகள் கழித்து ஒரு ஐசிசி கோப்பையையும் வென்றுள்ளது இந்தியா. கோப்பையுடன் இந்திய அணியின் தூண்கள் ரோகித் சர்மா, விராட் கோலி தங்களது ஓய்வை அறிவித்து விட்டார்கள்.
2007-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான அணி கோப்பையை வென்ற போது, அணியில் வீரராக இருந்த ரோகித் தற்போது கேப்டனாக கோப்பையை தனதாக்கியிருக்கிறார்.
வீரர்கள் தங்களது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல், மைதானத்தில் கண்ணீர் சிந்தினர். இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா 2 ஐசிசி இறுதி போட்டிகளில் கோப்பையை நழுவவிட்டார்.
வெற்றி களிப்பில்
டெஸ்ட் கோப்பை மற்றும் 2023 உலகக்கோப்பை ஒரு நாள், அதற்கு தற்போது பரிகாரம் தேடிக்கொண்டுள்ள அவர், இந்தியாவிற்காக உலகக்கோப்பையை வென்ற 3-வது கேப்டனாக மாறியுள்ளார். உணர்ச்சிவசப்பட்ட ரோகித், தனக்கு கோப்பையை கையில் கொடுத்த பார்படாஸ் மைதானத்தின் புற்களை திண்றார்.
இந்த சைகை, சுகாதாரமற்றதாக இருந்தாலும், இந்திய கேப்டனை ஓட்டிக்கொண்டே இருந்த ஆழ்ந்த பற்றுதல் மற்றும் உறுதியால் தூண்டப்படுகிறது. இந்திய கேப்டன் மற்றும் அவரது அணியினரின் விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் நெகிழ்ச்சி ஆகியவை அவர்களுக்கு உலகக் கோப்பையை வென்றது.
பணியை நிறைவேற்றிய பிறகு, ரோஹித் மண்ணுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியிருந்தது.