வெற்றியின் மிதப்பில் இந்திய அணி; பிட்ச் மண்ணை சாப்பிட்ட ரோகித் சர்மா..பின்னணி என்ன!

Rohit Sharma Indian Cricket Team
By Swetha Jul 03, 2024 05:22 AM GMT
Report

ரோகித் ஷர்மா பிட்ச் மண்ணை தின்றது ஏன்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 ரோகித் சர்மா..

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றது. இதன் மூலம் வரலாற்றில் இடம் பிடித்த ரோகித் வித்தியாசமாக ஆடுகளத்தில் இருந்த மண்ணை எடுத்து தின்றார்.ரோகித் சர்மா ஏன் இறுதிப் போட்டிக்கு பின் ஆடுகளத்தில் இருந்த புற்களை எடுத்து தின்றார் என்று பலருக்கும் தெரியவில்லை.

வெற்றியின் மிதப்பில் இந்திய அணி; பிட்ச் மண்ணை சாப்பிட்ட ரோகித் சர்மா..பின்னணி என்ன! | Rohit Sharma Eat Sand In Pitch During Celebration

அதாவது ஒவ்வொரு வீரர்களும் ஒவ்வொரு விதமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள். அனால் ரோகித்தின் இந்த கொண்டாட்டம் சற்று வித்தியாசமாக இருந்தது பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. இது குறித்து விளக்கம் அளித்த ரோகித் சர்மா, வெற்றியின் மிதப்பில் இருந்தபோது நான் நேரடியாக ஆடுகளத்திற்கு சென்றேன்.

ஏனென்றால் இந்த வெற்றியை இந்த ஆடுகளம் தான் எங்களுக்கு வழங்கியது. இந்த ஆடுகளத்தில் விளையாடி தான் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறோம். எனவே இந்த பார்படாஸ் மைதானத்தை என் வாழ்நாள் முழுவதும் நான் மறக்க மாட்டேன். இந்த ஆடுகளம் எனக்குள் இருக்க வேண்டும்.

சர்வதேச கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை - ரோஹித், வில்லியம்சனுக்கு சொந்தம்!

சர்வதேச கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை - ரோஹித், வில்லியம்சனுக்கு சொந்தம்!

பின்னணி என்ன

என்னுள் கலக்க வேண்டும் என்பதற்காக நான் இவ்வாறு செய்தேன். இந்த தருணங்கள் எல்லாம் மிகவும் ஸ்பெஷல் ஆனது. என்னுடைய ஒட்டுமொத்த கனவும் பார்படாஸ் மண்ணில் தான் நிஜமாகி இருக்கிறது. இதனால் தான் அதனை நான் எடுத்து சாப்பிட்டேன் என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.

வெற்றியின் மிதப்பில் இந்திய அணி; பிட்ச் மண்ணை சாப்பிட்ட ரோகித் சர்மா..பின்னணி என்ன! | Rohit Sharma Eat Sand In Pitch During Celebration

இந்த கொண்டாட்டத்தை முதலில் தொடங்கியவர் டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் தான். விம்பிள்டன் பட்டத்தை வென்ற போது அவர் ஆடுகளத்தில் இருந்த புல்லை எடுத்து தின்றார். இதனை தான் தற்போது ரோகித் சர்மா செய்திருக்கிறார்.

பொதுவாக விளையாட்டு வீரர்களை வரலாற்றில் மிகச் சிறந்தவர் என கோட் GOAT அதாவது Greatest of all time என்ற வார்த்தையை சொல்லி அழைப்பார்கள். ஆடு(Goat) போல் புற்களை வீரர்களும் சாப்பிடுவதால் தாங்கள்தான் அந்த கோட் என்பதை வீரர்கள் மறைமுகமாக இதன் மூலம் உணர்த்துகின்றனர்