சர்வதேச கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை - ரோஹித், வில்லியம்சனுக்கு சொந்தம்!

Rohit Sharma Cricket New Zealand India Kane Williamson
By Jiyath Jul 01, 2024 10:26 AM GMT
Report

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு தனித்துவமான சாதனையை ரோஹித் ஷர்மா மற்றும் வில்லியம்சன் படைத்துள்ளனர்.  

ரோஹித் ஷர்மா

2024 டி20 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில்,

சர்வதேச கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை - ரோஹித், வில்லியம்சனுக்கு சொந்தம்! | Rohit Sharma And Williamson Achieved Unique Feat

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது. அதில் இரண்டிலும் ஆஸ்திரேலிவாவுக்கு எதிராக தோல்வியை தழுவிய இந்திய அணி, தற்போது டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.

அடுத்த டி20 கேப்டன் - தலைமை பயிற்சியாளர் யார்..? ஜெய் ஷா முக்கிய தகவல்!

அடுத்த டி20 கேப்டன் - தலைமை பயிற்சியாளர் யார்..? ஜெய் ஷா முக்கிய தகவல்!

வில்லியம்சன் 

இதேபோல் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் சீசனிலேயே கோப்பையை வென்றது. மேலும், 2019 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2021 டி20 உலகக்கோப்பை தொடர்களில் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது.

சர்வதேச கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை - ரோஹித், வில்லியம்சனுக்கு சொந்தம்! | Rohit Sharma And Williamson Achieved Unique Feat

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) கேப்டனாக பங்கேற்றவர்கள் என்ற தனித்துவமான சாதனையை ரோஹித் ஷர்மா மற்றும் வில்லியம்சன் ஆகியோர் படைத்துள்ளனர்.