ரோகித் சர்மா, கோலி ஓய்வு பெறுவது எப்போது? உண்மை உடைத்த முன்னாள் பயிற்சியாளர்!
ரோகித், கோலி ஓய்வு குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
ஃபார்ம் அவுட்
பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி தற்போது இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இந்த தொடர் முழுவதும் பேட்டிங் செய்ய சிரமப்பட்டு வந்த நிலையில், 4வது டெஸ்டிலும் மோசமாக விளையாடினார். விராட் கோலி தொடர்ந்து ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வருகிறார்.
இருப்பினும் அவர் அணியில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ரவி சாஸ்திரி கருத்து
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலி இன்னும் சில ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடுவார் என நம்புகிறேன். ஆனால் ரோகித் சர்மாவை பொறுத்தவரை அவர்தான் முடிவு எடுக்க வேண்டும்.
அவர் முன்வரிசை வீரராக இருந்து விட்டு சரியாக விளையாடுவதில்லை. பேட்டிங் செய்யும்போது கால்களையும் அவர் சரியாக நகர்த்துவதில்லை. பந்தையும் தாமதமாக அடிக்கின்றார். எனவே இந்த தொடருக்குப் பிறகு ரோகித் சர்மா ஓய்வு பெற கூடும் எனத் தெரிவித்துள்ளார்.