டிராவிஸ் ஹெட் செய்தது ஆபாச செயல்; இப்படியா மோசமா கொண்டாடுவது - காரணம் இதுதான்!
டிராவிஸ் ஹெட் செய்த செயல் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டிராவிஸ் ஹெட் செயல்
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் டிராவிஸ் ஹெட் பந்துவீச்சில் ஒரு பெரிய சாட் ஆட முற்பட்டு பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார்.
இதனை டிராவிஸ் ஹெட் தனது விரலை கையில் உள்ளே விட்டு அவர் இந்த விக்கெட்டை மோசமாக கொண்டாடினார். இந்நிலையில், 2011- 12 சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நடுவிரலை உயர்த்தி ஆஸி.ரசிகர்களிடம் காட்டினார்.
வெடித்த சர்ச்சை
அப்போது அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. எனவே, ஹெட் செய்ததும் ஆபாசமான செயல் என்பதால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள ஆஸ்திரேலிய ஊடக நிபுணர் ஒருவர், ஹெட் செய்தது ஆபாசமான செயல் கிடையாது.
அது ஒரு வெற்றி கொண்டாட்டம். 2022 ஆம் ஆண்டு டிராவிஸ் ஹெட் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்போது தனது விக்கெட்டுகளை ஐஸ் நிறைந்த கோப்பையில் போட்டு கலக்குவது போல் ஒரு புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் டிராவிஸ் ஹெட் வைத்திருந்தார்.
தற்போது மேலும் ஒரு விக்கெட் தமக்கு கிடைத்திருப்பதை அந்த ஐஸ்கோப்பையில் போட்டு கலக்க போகிறேன் என்பதை தான் ஹெட் செய்தார். ஆனால் அது ஆபாசமாக இந்திய ரசிகர்களால் புரிந்து கொள்ளப்பட்டது என்று விளக்கமளித்துள்ளார்.