ரோஹித் நீக்கம்; கோலிக்கு மாற்று வீரர் - அதிரடி மாற்றம் செய்த பிசிசிஐ?
பார்ம் அவுட் வீரர்களை நீக்குவதில் பிசிசிஐ உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பார்ம் அவுட்
இந்தியா, ஆஸ்திரேலியா இடையில், முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்து, இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளது. 4ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா, ஸ்டார் வீரர் விராட் கோலி ஆகியோர் மோசமான ஃபார்மையே வெளிப்படுத்தியுள்ளனர்.
பிசிசிஐ முடிவு
தொடர்ந்து பார்ம் அவுட் வீரர்களை இனி விளையாட வைக்க கூடாது என்பதிலும் பிசிசிஐ உறுதியுடன் இருப்பதாக கூறப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு மாற்றாக ஹர்ஷித் ராணாவை விளையாட வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4ஆவது டெஸ்டில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மேட்ச் வின்னர்களாக இருந்தால் மட்டுமே, 5ஆவது டெஸ்டில் இடம் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. 5ஆவது டெஸ்ட் போட்டி, ஜனவரி 3ஆம் தேதி துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.