சாம்பியன்ஸ் கோப்பை; அரையிறுதிக்கு இந்த 5 அணிகள்தான் தகுதி பெறும் - கணிப்பில் ட்விஸ்ட்!
அரையிறுதிக்கு தகுதி பெற போகும் 4 அணிகள் குறித்த கணிப்பை பாக். வீரர் தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பிப்ரவரி 19ஆம் தேதியிலிருந்து மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்கான அட்டவணையையும் ஐசிசி வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் ஃபக்கர் சமான், பாகிஸ்தானில் இந்தத் தொடர் நடைபெறுவதால் சுழற் பந்துவீச்சை நன்றாக எதிர்கொள்ளும் அணியும் சுழற் பந்து வீச்சு பலமாக இருக்கும் அணியும் மட்டும்தான் வெற்றி பெற முடியும்.
ஃபக்கர் சமான் கணிப்பு
அந்த வகையில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற அணிகள் இந்த தொடரின் முதல் சுற்றில் இருந்து வெளியேறிவிடும்.
என்னை கேட்டால் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் தான் அரை இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும் என்று தெரிவித்துள்ளார்.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.