பார்ம் அவுட் கோலி - இறுதி போட்டியில் இல்லை!! சூசகமாக சொன்ன ரோகித்

Rohit Sharma Virat Kohli Indian Cricket Team 2024 T20 World Cup Cricket Tournament
By Karthick Jun 28, 2024 06:08 AM GMT
Report

நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்திலும் இந்திய நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

விராட் கோலி

இந்திய அணியின் முன்னணி நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி, உலகக்கோப்பை அணியில் இருப்பது மிகவும் முக்கியமான என பலர் சீனியர் கிரிக்கெட் ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.

Virat out vs england T20 world cup

கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஒப்பனராக வந்த கோலி, இது வரை 7 போட்டிகளில் இந்திய அணி விளையாடிவிட்ட நிலையில், ஒரு போட்டியிலும் விராட் பழையபடி தனது அசாதாரண ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும் அவர் ஒரே ஒரு சிக்ஸர் அடித்து வெளியேறினார். இந்திய ரசிகர்கள் அவர் மீது பெறும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

ரோகித் சூசகம்  

பேட்டிங்கில் மிகவும் நெருக்கடியான நிலையில், இந்திய அணி எதிர்கொள்ளவில்லை என்ற காரணத்தால், அணி தப்பித்து வருகிறது. ஆனால், விராட் விளையாடிய ஆகவேண்டும் என்ற நெருக்கடி வந்து அவர் சொதப்பியிருந்தால் பெறும் விமர்சனத்தை விராட் பெற்றிருப்பார்.

Virat and Rohit Sharma

அடலீஸ்ட் இறுதி போட்டியில் விராட் அனைவரையும் மிரட்டுவார் என்ற எண்ணம் ரசிகர்களிடம் இருக்கும் சூழலில், அவரை மாற்றவேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகினறன.

தண்ணி கேன் போட வந்தீங்களா? தொடர்ந்து ஏமாற்றும் விராட் - வேதனையில் ரசிகர்கள்

தண்ணி கேன் போட வந்தீங்களா? தொடர்ந்து ஏமாற்றும் விராட் - வேதனையில் ரசிகர்கள்

அரையிறுதி போட்டியில் post match presentation'இல் இது குறித்து அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்டபோது அவர், விராட் தனது சிறப்பான ஆட்டத்தை இன்னும் சேமித்து வைத்திருக்கிறார் என்று கூறி அணியில் மாற்றம் இருக்காது என்பது சூசகமாக தெரிவித்து சென்றுள்ளார்.