இது எனக்கு புதுசல்ல; பாண்டியாக்கு கீழ் விளையாடுவது அவமானம்? ரோகித் ஓபன் டாக்!

Swetha
in கிரிக்கெட்Report this article
மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியாவுக்கு கீழ் விளையாடுவதை குறித்து ரோகித் சர்மா பேசியுள்ளார்.
பாண்டியா
நடப்பாண்டில் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த லீக் போட்டியில் வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கான போட்டி நடைபெற்றது.
அதில் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி தொடங்கிய விளையாட்டில் கொல்கத்தாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியது. இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தத நிலையில், 18.5 ஓவர்களில் மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்களை குவித்து படுத்தோல்வி அடைந்தது.
இதனால் 12 வருடங்கள் கழித்து மும்பையை அதன் சொந்த மண்ணில் கொல்கத்தா தோற்கடித்தது. மறுபுறம் 11 போட்டிகளில் 8-வது தோல்வியை பதிவு செய்த மும்பை பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பை இழந்துள்ளது.
ரோகித்
ரோகித் சர்மாவுக்கு மாற்றாக கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா தலைமையிலான முதல் வருடத்திலேயே லீக் சுற்றுடன் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வுகுழுத் தலைவர் அஜித் அகர்கர் இருவரும் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது, ஹர்திக் பாண்ட்யவின் கேப்டன்சியின் கீழ் ஆடுவது குறித்த கேள்விக்கு, இதுவும் வாழ்வின் ஒரு பகுதிதான். எப்போதுமே உங்களுக்கு சாதகமான விஷயங்கள் மட்டுமே நடந்துகொண்டிருக்காது. கேப்டனாக இல்லாமல் ஆடுவதெல்லாம் எனக்கு புதிதான விஷயம் கிடையாது.
என்னுடைய கரியரின் ஆரம்பக்கட்டத்தில் நான் நிறைய கேப்டன்களுக்கு கீழ் ஆடியிருக்கிறேன். எனக்கு கேப்டனாக இருப்பது கேப்டனாக இல்லாமல் இருப்பதிலெல்லாம்நான் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை. ஒரு வீரராக அணிக்கு என்ன தேவையோ அதை செய்வதில்தான் என்னுடைய கவனம் முழுவதும் இருக்கும் என்று பதிலளித்துள்ளார்.