விவாகரத்து'லாம் இல்லை - அனுதாபத்திற்காக ஹர்திக் போடும் நாடகம்!! வெளுத்துவாங்கிய ரோகித்!!

Hardik Pandya Indian Cricket Team Divorce
By Karthick May 29, 2024 02:45 AM GMT
Report

தனது தோல்விகளை மறைக்க ஹர்திக் பாண்டியா தரப்பில் இருந்து PR வேளைகளில் ஒன்று தான் இந்த விவாகரத்து புரளி என நடிகர் மற்றும் சமூக ஊடக பிரபலம் ரோஹித் குப்தா சாடியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா விவகாரத்து

பிரபல கிரிக்கெட்டராக இருக்கும் ஹர்திக் பாண்டியா இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பெரும் விமர்சனங்களை பெற்று வருகிறார். மும்பை அணிக்கு அவர் கேப்டனானதை தொடர்ந்து பல்வேறு வகையான விமர்சனங்களை அவர் மீது எழுந்து கொண்டே இருக்கின்றன.

Hardik with wife

அதே நேரத்தில், மும்பை அணியை ஒரு கேப்டனாக வழி நடத்த தவறிய ஹர்திக், ஒரு வீரராகவும் பேட்டிங் பௌலிங் என இரண்டிலும் கோட்டை விட்டார். அதனை தொடர்ந்து இன்னும் விமர்சனங்கள் அதிகரித்தன.

உலகக்கோப்பை டி20 இன்னும் சில தினங்களில் துவங்கும் நேரத்தில், அவரும் அவரது மனைவி நடாஷாவும் விவாகரத்து பெறவுள்ளதாக அடுத்து செய்தி வெளியாகி காட்டு தீ போல நாடு முழுவதுமே பரவியுள்ளது.

யாருக்கும் என்னோட சொத்த கொடுக்க முடியாது - வைரலாகும் ஹர்திக் பாண்டியா வீடியோ

யாருக்கும் என்னோட சொத்த கொடுக்க முடியாது - வைரலாகும் ஹர்திக் பாண்டியா வீடியோ


ஆனால், இருவருமே அது தொடர்பாக எதுவும் பேசவில்லை. இந்த நிலையில் தான், நடிகர் மற்றும் சமூக ஊடக பிரபலம் ரோஹித் குப்தா இது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

நாடகம்

ஐபிஎல் 2024 சீசன் அவமானத்தைத் தொடர்ந்து களங்கம் அடைந்த தனது இமேஜை சரிசெய்து கொள்ள ஹர்திக் பாண்டியா தனது மனைவியைப் பயன்படுத்துகிறார் என்று குப்தா குற்றம் சாட்டியிருக்கிறார்.

rohit says hardik divorce is a fake thing

மேலும் குறித்து அவர் மேலும் கூறுகையில், ஹர்திக்கின் PR குழு வேண்டுமென்றே ஒரு கதையை அமைத்து பரவவிட்டு தற்போது அவர்களின் மவுனமே இது ஒரு கதை தான் என்பதை காட்டுகிறது என மேலும் விமர்சித்தார்.

விவாகரத்து வதந்தி என்பது ஒரு தோல்வியுற்ற PR விளையாட்டைத் தவிர வேறில்லை என்றும், ஒரு சாமானிய மனிதன் இந்தக் கதையை நம்பும் அளவிற்கு ஊமையாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.