யாருக்கும் என்னோட சொத்த கொடுக்க முடியாது - வைரலாகும் ஹர்திக் பாண்டியா வீடியோ
ஹர்திக் பாண்டியா விவாகரத்து செய்தி இணையத்தை அதிரவைத்து வருகின்றது.
ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஹர்திக் பாண்டியா இந்த ஆண்டு பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றார். குஜராத் அணிக்கு முதல் தொடரிலேயே கோப்பையை வென்று கொடுத்தவர், மீண்டும் மும்பை அணிக்கு திரும்பி கேப்டனாகினார்.
ஆனால், அவருக்கு பெரிய விமர்சனங்கள் தான் கிடைத்தன. அதே போல தொடரும் சிறப்பானதாக அமையவில்லை. 10-வது இடத்தையே மும்பை அணி பெற்றது. தற்போது உலகக்கோப்பை இன்னும் ஓரிரு நாளில் துவங்கியிருக்கும் நிலையில், மற்றுமொரு சவாலான நிலையை ஹர்திக் எதிர்கொள்கிறார்.
அவரும் அவருடைய மனைவி நடாஷாவும் விவாகரத்து பெறுகிறார்கள் என தொடர் செய்திகள் வெளிவர துவங்கிவிட்டன. அதே போல, செர்பியா நாட்டை நடாஷா சேர்ந்தவர் என்பதால், அந்நாட்டு விதிகளின் படி, ஹர்திக் பாண்டியா தனது சொத்தில் 70%'த்தை மனைவிக்கு அளிக்கும் வரும் என தொடர்ந்து செய்திகள் வெளிவருகின்றன.
யாருக்கும்
ஆனால், விவாகரத்து குறித்து இது வரையில் இருவருமே எதுவும் பேசவில்லை. மவுனம் காக்கிறார்கள். இந்த நிலையில், தான் பழைய வீடியோ ஒன்று இணையத்தை வைரலாக்கி வருகின்றது.
Hardik pandya is a smart man.. he knew about this divorce thing could happen with Natasha. #Hardikpandya #Hardik #pandya #natasha #divorce pic.twitter.com/xzFSvtrPFq
— Win Wonders (@memes_war_mw) May 25, 2024
அதில், தனது சொத்தில் பாதியை தனது அம்மாவின் பெயருக்கு எழுதி வைத்திருக்கிறேன். கார், வீடு எல்லாமே அம்மாவின் பெயரில் தான் இருக்கிறது. வருங்காலத்தில் நான் யாருக்கும் என்னுடைய சொத்தை பங்குபோட்டு கொடுக்க வேண்டாம் என பேசினார் ஹர்திக்.