ரோஹித் அப்படித்தான் விளையாட வேண்டும்; அதுதான் விருப்பம் - மும்பை பயிற்சியாளர்
ரோஹித் அதிரடியாக விளையாடுவதையே விரும்புவதாக மும்பை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா
ஐபிஎல் தொடரில் கடந்த 20ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அசத்தல் வெற்றி பெற்றது.
நடப்பு தொடரின் தொடக்க ஆட்டங்களில் ரோஹித் சர்மா ஃபார்ம் இன்றி விளையாடி பல விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், சென்னைக்கு எதிரான இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக 45 பந்தில் 76 ரன்கள் எடுத்தார்.
பயிற்சியாளர் விருப்பம்
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மும்பை பயிற்சியாளர் ஜெயவர்தனே, ”ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினால், ஆட்டத்தில் மாற்றம் ஏற்படும். அவர் அதிரடியாக விளையாடி சிறப்பான தொடக்கத்தை கொடுக்கும்போது, அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் நம்பிக்கை அதிகரிக்கும்.
அதனால், அவர் அதிரடியாக விளையாடுவதையே நாங்கள் விரும்புகிறோம். அதிரடியாக விளையாடும் அணுகுமுறையில் அவர் ஒருபோதும் மாற்றம் செய்யவில்லை. குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தபோதும், முதல் போட்டியிலிருந்தே அவர் அதிரடியாக விளையாடி வருகிறார்.
அணிக்காக அவர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க விரும்புகிறார். அணி நிர்வாகமும் அதனையே விரும்புகிறது. அவர் அதிரடியாக விளையாடுவதற்கு அணி நிர்வாகம் முழு ஆதரவையும் அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.