ரோஹித் ஆட்டமிழப்பு; கொண்டாடிய சிஎஸ்கே ரசிகர் அடித்தே கொலை - அதிர்ச்சி சம்பவம்!
ரோகித் சர்மா அவுட்டானதும் கொண்டாடிய சிஎஸ்கே ரசிகரை நண்பர்கள் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிஎஸ்கே ரசிகர்
நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. அப்போது போட்டியின் தொடக்கத்தில் இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா விளையாடினர்.
போட்டியில், ரோகித் 26 ரன்களை குவித்து தன் ஆட்டத்தை இழந்தார். இந்நிலையில், இந்த போட்டியை காண மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பந்தோபண்ட் திபிலே (63) என்பவர் அவரது நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு அதே நேரத்தில் திபிலேவின் மற்றொரு நண்பரான பலவந்த் ஜாஞ்ஜே (50) என்பவரும் வந்துள்ளார். போட்டியை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தபோது, சிஸ்கேயின் தீவிர ரசிகரான திபிலே ரோகித் சர்மா அவுட்டானதை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.
அடித்தே கொலை
ஆனால் ஜாஞ்சே, ரோகித்தின் தீவிர ரசிகர் ஆவார். மேலும், திபிலே கூறிய சில கருத்துகள் ஜாஞ்சேவை மிகவும் ஆத்திரப்படுத்தியது இதனால் இருவரிடையும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், ஜாஞ்சே மருமகன் சாகர் என்பவரை அழைத்து வந்து திபிலேவை அடித்து, உதைத்துள்ளார். மரப்பலகை மற்றும் கம்பு ஒன்றை வைத்து சாகர் கடுமையாக தாக்கினார். இதனால், திபிலே மயங்கி தரையில் சரிந்து விழுந்துள்ளார்.
இதன் பிறகு, அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்த தகவலறிந்த போலீசார் திபிலேவின் நண்பர் மற்றும் மருமகன் சாகர் இருவரும் கைது செய்து. நீதிமனறத்தில் அவர்களை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.