CSK VS DC; சென்னை அணி தோல்விக்கு என்ன காரணம்? ருதுராஜ் கெய்க்வாட் விளக்கம்!

Chennai Super Kings Delhi Capitals IPL 2024
By Swetha Apr 01, 2024 05:33 AM GMT
Report

டெல்லிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணம் குறித்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

சென்னை அணி

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து வெற்றியை சந்தித்து வந்த சிஎஸ்கே அணி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

CSK VS DC; சென்னை அணி தோல்விக்கு என்ன காரணம்? ருதுராஜ் கெய்க்வாட் விளக்கம்! | Chennai Team Lost The Match Against Delhi

இம்முறை போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடி அசத்திய வார்னர் 52 ரன்களும், ரிஷப் பந்த் 51 ரன்களை சேர்த்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் தொடர்ந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தனர். இருப்பினும் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி போட்டியின் இறுதியில் களமிறங்கி 16 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 37 ரன்களை குவித்து அசத்தினார்.

இது அணி தோல்வியடைந்தாலும் தோனியின் அசத்தல் ஆட்டம் சென்னை அணி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த சீசனில் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு முதல் முறை ருதுராஜ் கெய்க்வாட் தோல்வியைச் சந்தித்துள்ளார்.

CSK vs GT; ஆட்டத்தை மாற்றிய தோனி! 2-வது முறையாக சேப்பாக்கத்தில் அபார வெற்றி!

CSK vs GT; ஆட்டத்தை மாற்றிய தோனி! 2-வது முறையாக சேப்பாக்கத்தில் அபார வெற்றி!


ருத்ராஜ் விளக்கம்

இது குறித்து அவர் பேசுகையில், முதல் 6 ஓவர்களுக்கு பின் எங்களது அணியின் பவுலர்கள் நல்ல கம்பேக் கொடுத்தார்கள். அவர்களை 190 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த பிட்சில் முதல் இன்னிங்ஸின்போது பேட்டிங்கிற்கு கொஞ்சம் சாதகமாக இருந்தது.

CSK VS DC; சென்னை அணி தோல்விக்கு என்ன காரணம்? ருதுராஜ் கெய்க்வாட் விளக்கம்! | Chennai Team Lost The Match Against Delhi

ஆனால், 2வது இன்னிங்ஸின்போது பிட்சில் கொஞ்சம் ஸ்விங் இருந்தது. ரச்சின் ரவீந்திரா கொஞ்சம் கூடுதலாக பந்துகளை மிஸ் செய்தார். அதற்கு பிட்சில் கூடுதல் மற்றும் ஸ்விங் இருந்ததே காரணம்.

அதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் முதல் பாதிக்கு பின் இலக்கை எட்டிவிடலாம் என்று நினைத்தோம். ஆனால் பவர் ஃபிளே ஓவர்களில் சொதப்பியது பின்னடைவாக இருந்தது.

நாங்கள் இலக்கைத் துரத்த வேண்டிய தேவையில் இருந்து கொண்டே விளையாடினோம். டெல்லி பேட்டிங்கின்போது முதல் 4 ஓவர்களை நன்றாக வீசினோம். பவர் ஃபிளேவின் கடைசி 2 ஓவர்கள் கொஞ்சம் கூடுதலாக ரன்கள் சென்றது.2 வெற்றிகளுக்கு பின் ஒரு தோல்வி வருவது சகஜம்தான். அதனால் கவலைப்பட தேவையில்லை" என்று தெரிவித்துள்ளார்.