CSK vs GT; ஆட்டத்தை மாற்றிய தோனி! 2-வது முறையாக சேப்பாக்கத்தில் அபார வெற்றி!
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.
அபார வெற்றி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் - குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.
சிறப்பாக விளையாடிய சிவம் துபே 51 ரன்களும், ரச்சின் ரவீந்திரா மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலா 46 ரன்களை குவித்தனர். இதனையடுத்து, களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே பெற்று படுத்தோல்வி அடைந்தனர்.
சிஎஸ்கே அணியின் தீபக் சஹர், முஷ்தாஃபிசுர் ரஹ்மான் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.
தோனி
இந்த போட்டியிலாவது தோனி பேட்டிங் செய்ய களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வராதாதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்தனர். ஆனால், ஃபீல்டிங்கில் தோனி செய்த சாகசங்களை பார்த்த ரசிகர்கள் வியந்துள்ளனர்.
சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் டேரல் மிட்சல் வீசிய பந்தை விஜய் சங்கர் அடித்தபோது எட்ஜாகி தோனிக்கு அருகில் பறந்தது. அதனை சிறுத்தை போல் தோனி பாய்ந்து இரு கைகளாலும் கேட்ச் பிடித்து வியப்பில் ஆழ்த்தினார்.
விஜய் சங்கர் பேட்டில் அடித்த பந்தை வெறும் 0.60 நொடியில் சுமார் 2.27 மீட்டர் தூரம் டைவ் அடித்து தோனி கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார்.
42 வயதிலும் தோனி கில்லியாக செயல்படுவது ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக வீரர்களுக்கு ஆச்சரியம் படுத்தியுள்ளது.