கேப்டனாக ரோகித் செய்த 2 தவறு - வெற்றி பெறாததற்கு அதுவே காரணம்!! ரசிகர்கள் ஆதங்கம்
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி சமனில் முடிந்துள்ளது.
இந்தியா தோல்வி
இதற்கு ரோகித் சர்மா செய்த தவறு தான் காரணம் என அவரை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். முதல் ஒரு நாள் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, ஒரு கட்டத்தில் 101 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்திருந்தது.
ஆனால், அதனை தொடர்ந்து ஆட்டம் இந்திய அணியின் கையை விட்டு நழுவி சென்றது. மெல்ல இலங்கை அணி சரிவில் இருந்து மீள, மற்றுமொரு தவறாக கேப்டன் ரோகித் சர்மா, பகுதிநேர பந்துவீச்சாளரான சுப்மன் கில்'லிற்கு பந்துவீச வாய்ப்பு அளித்தார். அந்த ஒரு ஓவரில் மட்டுமே 14 ரன்களை இலங்கை எடுத்தது.
ரோகித்தின் தவறு
இதற்கும் அது கடைசி 10 ஓவர்களில் ஒன்று. அது இலங்கை அணிக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. அந்த அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 230 ரன்களை சேர்த்தது.
அபாரமாக விளையாடிய டுனித் வெல்லாலகே 67(65) ரன்கள் சேர்த்தார். அதே போல மற்றொரு தவறாக, மிடில் ஆர்டரில் 4-வது வீரராக கே.எல்.ராகுல் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார்.
அவர் 5(4) எடுக்க, அணி 87/3 என்ற நிலைக்கு தள்ளப்பட்டு சற்று நெருக்கடிக்குள்ளானது.
பௌலிங்கில் ஒரு தவறு, பேட்டிங்கில் ஒரு தவறு என கேப்டனாக ரோகித் சர்மா செய்தது தான் போட்டி சமனில் முடிய காரணமாகிவிட்டதாக ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
