ஓய்வு குறித்து அறிவிப்பேன்..IPL மெகா Auction நெருக்கடி!! தவிக்க வைக்கும் BCCI -விலகும் தோனி?
ஐபிஎல் மெகா auction நெருங்கி வரும் நிலையில், இன்னும் ஒரு சீசன் தோனி ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.
தோனி
2019-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்று விட்ட தோனி, தொடர்ந்து ஐபிஎல் விளையாடி வருகிறார். சென்னை அணிக்காக தோனி விளையாடுவதை பார்ப்பதற்காகவே பல டிக்கெட் விற்பனையாகிறது. இவ்வாறான சூழலில் தான், அவரின் ஓய்வு குறித்து அதிகளவில் பேசப்படுகிறது.
43 வயதை அவர் எட்டிவிட்டாலும், அவர் விளையாட fit'டாகவே இருக்கிறார் என பலர் கூறினாலும், அவரின் உடல் பிரச்சனை என்பது அவருக்கு மட்டுமே தெரியும். இச்சூழலில் தான், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக மெகா auction நடைபெறவுள்ளது. இதற்காக நிச்சயமாக தோனியை சென்னை அணி தக்கவைத்து கொள்ளும்.
ஓய்வு குறித்து
அதற்காக பல கோடிகள் செலவு செய்யவேண்டியிருக்கும். இதனால் பல தரப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. தோனி இது குறித்தெல்லாம் பேசும் போது, ஐபிஎல் 2025 வீரர்களின் தக்கவைப்புத் விதிமுறை மட்டும் திட்டங்களின் அடிப்படையில் ஒரு முடிவை எடுப்பதற்கு முன், விதிகள் எப்படி இருக்கின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்று பேசியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் தோனி கலந்து கொண்ட போது, இக்கருத்துக்களை தோனி தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசும் போது, இன்னும் இதற்கு நிறைய நேரம் இருக்கிறது. வீரர்களை தக்கவைத்தலில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்றார்.
இப்போது பந்து நம் கோர்ட்டில் இல்லை. எனவே, விதிகள் மற்றும் விதிமுறைகள் முறைப்படுத்தப்பட்டவுடன், பதிலளிக்கிறேன். இருப்பினும் அது நிச்சயமாக அணியின் நலனுக்காக இருக்க வேண்டும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
பல தரப்பட்ட கோரிக்கைகள் வீரர்கள் Retention குறித்து வைக்கப்பட்டு வரும் சூழலில், சென்னை அணிக்காக இன்னும் ஒரு சீசன் தோனி விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள். முடிவு BCCI கையில்.

viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி! Manithan

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
