பிசிசிஐ முடிவெடுத்தால் மட்டுமே..Mega Auction ஏலத்தில் வரும் தோனி!! தவிக்கும் சிஎஸ்கே நிர்வாகம்!
வரவிருக்கும் ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்பாக, ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறவுள்ளது.
மெகா ஏலம்
அடுத்து ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஐபிஎல் மெகா Auction நடைபெறவிருக்கிறது. இந்த Auction'க்கு முன்பாக, அணி உரிமையாளர்களுக்கு மத்தியிலான ஆலோசனை கூட்டம், நாளை பிசிசிஐ அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதற்கு முன்பாகவே, சில அணிகள் Retention கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். அதாவது மும்பை, கொல்கத்தா அணிகள் அணியில் 6 வீரர்களை தக்கவைக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதே நேரத்தில், டெல்லி, பஞ்சாப், லக்னோ, குஜராத் போன்ற அணிகளின் சார்பில் பழைய retention முறையே கையாள படவேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாம். பழைய முறை என்பது, ஒரு அணியில் 4 வீரர்கள் - 3 இந்திய வீரர்கள் 1 வெளிநாட்டு வீரர் என தக்கவைக்க அனுமதி உள்ளது.
தோனி முடிவு
இதில், பிசிசிஐ அணியில் 5 வீரர்கள் தக்கவைத்து கொள்ள அனுமதியளித்ததாகவும் தகவல் கிடைக்கப்பெறுகிறது. அதாவது, 4 இந்திய வீரர்கள் 1 வெளிநாட்டு வீரர் அல்லது 3 இந்திய வீரர்கள் 2 வெளிநாட்டு வீரர்கள் தக்கவைத்து கொள்ளலாம் என்ற முடிவில் பிசிசிஐ உள்ளதாம்.
இவ்வாறு 5 வீரர்களை தக்கவைத்து கொள்ள அனுமதிக்கப்பட்டால், நிச்சயமாக மற்றுமொரு சீசன் தோனி களமிறங்குவார். ஆனால், அவர் தன்னை கடைசி வீரராகவே தக்கவைத்து கொள்ள அறிவுறுத்தியுள்ளாராம் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கு.
ஏனென்றால், தோனியை ஏலத்தில் எடுக்கும் நிலை வந்தால் அவருக்கு பெரிய தொகை செலவாகும். அதனை கட்டுப்படுத்தும் வகையில் தன்னை கடைசி வீரராகவே தக்கவைத்து கொள்ள முடிவெடுத்து அணி நிர்வாகத்திடம் பேசினார் தோனி என்ற ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி! Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
