நான் ஏன் இருக்கணும்? எல்லாமே சர்ச்சையாகிறது - தோனியின் பேட்டி -அதிர்ந்த ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக கொண்டாடப்படுகிறார் தோனி.
தோனி
இளம் இந்திய அணியை யாரும் எதிர்பார்க்காத நிலையில் வழிநடத்தி 2007-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்று கொடுத்தார் தோனி. அதுவரை ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டுமே அறியப்பட்ட தோனி, தலைவராக உயர்ந்தார்.
1983ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய ரசிகர்கள் ஏங்கி கொண்டிருந்த உலககோப்பையை 2011-ஆம் ஆண்டு இந்திய மண்ணிலேயே சிக்ஸர் அடித்து வாங்கி கொடுத்து மற்றுமொரு சாதனை நிகழ்த்தினார். கேப்டன் என்றால் அது தோனி தான் என கூறும் அளவிற்கு அணியை சிறப்பாக கொண்டு சென்றார்.
2013-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையையும் வாங்கி கொடுத்து, இது வரை கிரிக்கெட்டில் ஒரு கேப்டன் செய்து காட்டிற முடியாத சாதனையை தனதாக்கி கொண்டுள்ளார் தோனி.
ஐபிஎல் இதுவரை 10 முறை இறுதி போட்டி, 5 முறை கோப்பை என அங்கும் சாதனை பட்டியல் நீளுகிறது. சமூகவலைத்தளங்களில் இருந்து பெரும்பாலும் விலகி இருக்கும் அவர், அவ்வப்போது சில பதிவுகளை மட்டுமே பதிவிடுகிறார்.
ஏன் இருக்க வேண்டும்?
தற்போது தோனி சமூகவலைத்தளங்கள் குறித்து பேசியுள்ளது வைரலாகி வருகிறது. துபாயில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தோனி, 'எக்ஸ்' தளத்திற்கு பதிலாக தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தையே விரும்புவதாக தெரிவித்துள்ளார். "எக்ஸ்'ஐ விட இன்ஸ்டாகிராமில்தான் எனக்கு விருப்பம், 'எக்ஸ்'க்கு மேல் எதுவுமே நல்லது நடக்கவில்லை என்று நம்புகிறேன்.
குறிப்பாக ஒரு சர்ச்சை, யாரோ எதையாவது எழுத அதை சர்ச்சையாக மாற்றுவார்கள்.
நான் ஏன் அங்கு இருக்க வேண்டும்? அது உங்களுக்குத் தெரியும். நான் எதோ ஒன்று எழுத, அதனை எப்படி புரிந்து கொள்ளவேண்டும் என்பதையெல்லாம் உங்களிடம் விட்டுவிடுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
