டி20 கிரிக்கெட்டில் முதல் வீரர் - 100 வெற்றி ரோகித்'தின் அசாத்திய சாதனை...!

Rohit Sharma India Indian Cricket Team
By Karthick Jan 12, 2024 07:13 AM GMT
Report

 டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100 வெற்றியை பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

டி20 போட்டி

ஆப்கனிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. இதில், இந்தியா அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் சேர்த்து.

rohit-becomes-1st-player-to-have-100-t20-wins

அந்த அணியில் அதிகபட்சமாக முகமது நபி 27 பந்துகளுக்கு 42 ரன்கள் குவித்தார். பின்னர் எளிதான இலக்கை துரத்திய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரன் அவுட்டாகி விக்கெட்டை இழந்தார்.

rohit-becomes-1st-player-to-have-100-t20-wins

அவரை தொடர்ந்து 23 ரன்களில் சுப்மன் கில் மற்றும் 26 ரன்களில் திலக் வர்மா ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா 31 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, ஆல்ரவுண்டர் ஷிவம் துபே கடைசி வரை விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தார்.

ரோகித் சாதனை

40 பந்துகளுக்கு 2 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் ஷிவம் துபே களத்தில் இருந்தார். மறுமுனையில் ரிங்கு சிங் 16 ரனகள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

rohit-becomes-1st-player-to-have-100-t20-wins

இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் இந்திய முதல் போட்டியை வென்று முன்னிலையில் உள்ளது.

வெடிக்கும் பிரதமர் மாலத்தீவு சர்ச்சை - ஒரே வீடியோ - தோனி சொன்னத பாத்தீங்களா..?

வெடிக்கும் பிரதமர் மாலத்தீவு சர்ச்சை - ஒரே வீடியோ - தோனி சொன்னத பாத்தீங்களா..?

ரோகித் சர்மா இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 தொடரில் 100 வெற்றிகளைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.மேலும் இவர் 149 போட்டிகளில் விளையாடி 100 வெற்றிகளை பெற்றுள்ளார்.