வெடிக்கும் பிரதமர் மாலத்தீவு சர்ச்சை - ஒரே வீடியோ - தோனி சொன்னத பாத்தீங்களா..?
பிரதமர் லட்சத்தீவு சென்றதை அடுத்து, மாலத்தீவு - லட்சத்தீவு சர்ச்சை பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.
பிரதமர் - லட்சத்தீவு
நாட்டின் பிரதமர் மோடி, அண்மையில் லட்சத்தீவு சென்று அந்த இடத்தை குறித்து தனது எக்ஸ் தளப்பாக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த இடங்களை குறித்த படங்களை வெளியிட்ட அவர், அந்த இடங்கள் மனதை மயக்குவதாக பதிவிட்டிருந்தார்.
பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை அடுத்து, மாலத்தீவு அமைச்சர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவர்கள் சிலர் சமூகவலைத்தளங்களில் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டனர்.
மாலத்தீவு அமைச்சர்களின் அந்த கருத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக நாட்டின் பல பிரபலங்கள் லட்சத்தீவு குறித்து ஆதரவாக கருத்துக்களை பதிவிட துவங்கினர். அது உலகளவில் கவனம் ஈர்த்த சம்பவமாக கடந்த வாரத்தில் அமைந்தது.
தோனி வீடியோ
இந்நிலையில் தான், இந்திய சுற்றுலாத் தலங்கள் குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் தோனியிடம் உங்களுக்கு பிடித்த இடம் எது? என்ற கேள்விக்கு, கிரிக்கெட் விளையாடும் போது பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டாலும்,
Few years ago, MS Dhoni: We want to explore Indian places first then outside India.#Maldives #MaldivesOuthttps://t.co/JvSk8SAytA
— Farrago Abdullah Parody (@abdullah_0mar) January 8, 2024
விளையாடிவிட்டு உடனடியாக திரும்பி வரும் சூழலே இருந்தது என்று கூறிய தோனி, நம் நாட்டில் பார்வையிட அழகான இடங்கள் பல உள்ளன என்றும் முதலில் அவற்றை பார்வையிட வேண்டும் என்று கூறினார்.