மகள் ரோகிணிக்கு எதிராக களமிறங்கிய லாலு பிரசாத் யாதவ் !! பீகார் தேர்தலில் சுவாரசியம்
பீகார் மாநிலத்தில் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் குடும்பமாக இருக்கிறது
லாலு பிரசாத் யாதவின் குடும்பம்
லல்லு பிரசாத் யாதவ் இந்திய அரசியலில் செல்வாக்கு பெற்ற தலைவராக திகழ்கிறார் லாலு பிரசாத் யாதவ். பீகார் மாநிலத்தின் முதல்வர், மத்திய ரயில்வே துறை அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ள அவர் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியையும் நிறுவினார்.
தற்போது இந்தியா கூட்டணியில் இருக்கும் லல்லு பிரசாத் யாதவின் கட்சி பீகார் மாநிலத்தில் 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பீகார் மாநிலத்தில் மொத்த மக்களவை தொகுதிகள் 40 ஆகும். தற்போது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய வேட்பாளராக பீகார் மாநிலத்தில் உள்ளார் லல்லுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா.
இவர் அம்மாநிலத்தின் சரண் தொகுதியில் போட்டியிடுகிறார். இதில் சுவாரசியம் என்னவென்றால், சரண் தொகுதியில் லாலு பிரசாத் யாதவ் என்ற பெயர் கொண்டவர் சுயேட்சையாக மனுதாக்கல் செய்துள்ளார்.
இவர் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் விவசாயி ஆவார்.
தந்தையின் பெயர் கொண்ட நபருடன் மகள் ரோகிணி போட்டியிடுவதால்,இந்த தொகுதி சுவாரசியம் பெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.