ரோபோ சங்கருக்கா இந்த நிலைமை? - மெலிந்த முகத்தோற்றத்தை கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
விஜய் டிவி நடத்திய Start Music Season 4-ல் பங்கேற்ற நடிகர் ரோபோ ஷங்கர் அடையாளமே தெரியாமல் எலும்பும், தோலுமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சினிமாவில் அறிமுகம்
விஜய் டிவி நிகழ்ச்சியான கலக்கப் போவது யாரு? மூலம் அறிமுகமானவர் ரோபோ ஷங்கர். பின்னர் தன்னுடைய அசாத்திய காமெடி திறமையால் தொகுப்பாளர் என முன்னேறிய அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
இதையடுத்து அவர், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி, புலி, போன்ற திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.
எலும்பும், தோலுமாக மாறிய ரோபோ ஷங்கர்
இவர் அண்மையில் வீட்டில் அனுமதியின்றி அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளை வளர்த்ததற்காக அபாரதம் செலுத்தி சர்ச்சையில் சிக்கினார்.
இந்த நிலையில் விஜய் டிவியில் தொகுப்பாளர் பிரியங்கா தொகுத்து வழங்கி வரும் Start Music Season 4 இல் பங்கேற்ற நடிகர் ரோபோ சங்கர் ஆளே அடையாளம் தெரியாத வகையில் படும் ஒல்லியாக எலும்பும், தோலுமாக இருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவர் சுறுசுறுப்பு இன்றி காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் புதிய படத்திற்காக நடிக்க உள்ள கெட்டப்பிற்காக தனது உடல் எடையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil
