Tuesday, Apr 29, 2025

இதனால் தான் மாமியாருக்கு கிஸ் கொடுத்துட்டேன் - முதல் முறை மனம் திறந்த இந்திராஜா கணவர்

Robo Shankar
By Karthick a year ago
Report

பிரபல நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா திருமணம் அண்மையில் நடைபெற்றது.

இந்திரஜா ரோபோ சங்கர்

தமிழ் சினிமா உலகில் பிரபல காமெடி நடிகனாக அறியப்படுபவர் ரோபோ சங்கர். முதலில் இவர் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி திரைப்படங்களில் தோன்றினார்.

robo-shankar-wife-liplock-controversy-son-in-law

2002ல் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இந்திரஜா என்ற மகள் உள்ளார். இந்திரஜா பிகில் படத்தின் மூலம் பிரபலமானார்.

8-வது தான் படிக்கிறார் அதுக்குள்ளவா? சினிமாவில் அறிமுகமாகும் மகன் - ஜோதிகா கொடுத்த அப்டேட்

8-வது தான் படிக்கிறார் அதுக்குள்ளவா? சினிமாவில் அறிமுகமாகும் மகன் - ஜோதிகா கொடுத்த அப்டேட்

இந்நிலையில், இவர் தன்னுடைய முறை மாமா கார்த்திக் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலருமே இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

robo-shankar-wife-liplock-controversy-son-in-law

அதில், வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் ரோபோ சங்கரின் மனைவிக்கு, மருமகனான கார்த்திக் உதட்டில் முத்தம் கொடுத்தார். இதுகுறித்த வீடியோ வெளியாகி மருமகன் மாமியாரிடம் இப்படியா நடந்து கொள்வது எனப் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

robo-shankar-wife-liplock-controversy-son-in-law

இந்த சூழலில் இது குறித்து விளக்கத்தை மருமகன் கார்த்திக் அளித்துள்ளார். அவர் இது குறித்து பேசும் போது, கன்னத்தில் முத்தமிட முயன்ற போது, சட்டென அவர் திரும்பியதால் அப்படி ஆகிவிட்டது. அதனை புகைப்படமும் எடுத்து விட்டனர். இது எதிர்பாராத நிகழ்வு.