மகளுக்கு திருமணம்; இந்த நேரத்தில் 2வது குழந்தைக்கு ரெடி - ரோபோ சங்கர் பளீச்
தனக்கு இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்ள ஆசை இருப்பதாக ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.
ரோபோ சங்கர்
காமெடி, மெமிக்ரி என தனது திறமையால் பிரபலமானவர் நடிகர் ரோபோ சங்கர். சமீபத்தில் அவரது புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் மிகவும் மெலிந்து காணப்பட்டார். அதனை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து,
அவருக்கு ஆறு மாத காலமாக மஞ்சள் காமாலை இருந்ததாக தெரியவந்தது. தற்போது நலமாக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், எனது மகள் இந்திரஜாவுக்கு 21 வயது ஆகிறது. அவருக்கு திருமணம் முடிவு செய்திருக்கிறோம்.
மகள் திருமணம்
எங்கள் உறவிலேயே மாப்பிள்ளை பார்த்திருக்கிறோம். அவரும் சினிமாவில்தான் இருக்கிறார். எனக்கும் 21 வயதில்தான் திருமணம் நடைபெற்றது. இந்திரஜாவிடம் இந்தத் திருமணத்திற்கு சம்மதமா என கேட்டோம்.
அதற்கு அவர், சம்மதம் என தெரிவித்துவிட்டார்.
னக்கு பேர குழந்தைகளை கொஞ்ச வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அவர்களை தூக்கிக்கொண்டு பல நிகழ்ச்சிகளுக்கு போகவும் எனக்கு விருப்பம். அதுமட்டுமின்றி எனக்கும் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள் ஆசையாகத்தான் உள்ளது. ஆனால் நைட் ஷூட்டிங் நிறைய முறை போய்விடுகிறேன் எனக் காமெடியாக தெரிவித்துள்ளார்.