மஞ்சள் காமாலை நோயால் மரண வாசல் வரை சென்ற நடிகர் ரோபோ சங்கர்..!
கடந்த 5 மாதமாக தான் மரண படுக்கையில் இருந்ததாகவும், அதிலிருந்து மீண்டு வர தனக்கு நக்கீரன் கோபால் சார் தான் எனக்கு உதவிகரமாக இருந்தார் என உருக்கமாக தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் அசத்தல்
விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு? என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் ரோபோ சங்கர் தன்னுடைய அசாத்திய காமெடி திறமையால் அனைவரையும் சிரிப்பலைகளில் ஆழ்த்தினார்.
தற்போது தமிழ் சினிமாவில் நடித்து வரும் இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.
இவர் தமிழ் சினிமாவில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி, புலி போன்ற திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.
இவரது மனைவி பிரியங்காவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.
இவர்களது மகளான இந்திரஜாவும் தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மாவாக நடித்து பிரபலமானார்.
மஞ்சள் காமாலை நோயால் அவதி
இந்த நிலையில் நடிகர் ரோபோ சங்கர் கடந்த 6 மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக மாறிவிட்டார். அதன் பின்னர் தொடர் சிகிச்சை எடுத்த அவர் தற்போது நலமாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கடந்த 5 மாதமாக தான் மரண படுக்கையில் இருந்ததாகவும், அதிலிருந்து மீண்டு வர தனக்கு பெரிதும் உதவியவர் நக்கீரன் கோபால் சார் தான் என உருக்கமாக பேசினார்.
அவர் தான் எனக்கு சரியான சமயத்தில் வந்து ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற வைத்து என்னை சரி செய்தார்.
அவர் மட்டும் அப்படி செய்யவில்லை என்றால் நான் இன்னேரம் தற்கொலை செய்து கொண்டு இறந்திருப்பேன் என உருக்கமாக தெரிவித்தார்.