6 மாசமா இந்த பிரச்சனைதான் - சீக்ரெட் டிரீட்மென்டில் இருந்த ரோபோ சங்கர்

Tamil Cinema Robo Shankar Viral Photos
By Sumathi Apr 20, 2023 05:30 PM GMT
Report

ரோபோ சங்கர் உடல்நிலை குறித்த கேள்வி பரபரப்பாகவே பேசப்பட்டு வருகிறது.

ரோபோ சங்கர் 

காமெடி, மெமிக்ரி என தனது திறமையால் பிரபலமான நடிகர் ரோபோ சங்கர் சமீபத்தில் அவரது புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் மிகவும் மெலிந்து காணப்பட்டார். அதனை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் உடல்நல குறைவால் இப்படி மெலிந்திருக்க கூடும் என்று ரசிகர்கள் அனைவரும் கவலைபட்டனர்.

6 மாசமா இந்த பிரச்சனைதான் - சீக்ரெட் டிரீட்மென்டில் இருந்த ரோபோ சங்கர் | Robo Shankar Had A Treatment For 6 Months

அதற்கு அவரது குடும்பத்தினர் அவர் நலமாக இருக்கிறார். படத்திற்காக உடல் எடை குறைத்தார் என்று பதிலளித்திருந்தனர். இருப்பினும் சமீபத்தில் அவரது மனைவி வெளியிட்ட போட்டோ மற்றும் வீடியோகளில் கலை இழந்து காணப்பட்டதால் அவர் உடல்நலம் சரில்லாமல் இருப்பது போல் சந்தேகத்தையே எழுப்பியது.

டிரீட்மென்ட்

இந்நிலையில், அவர் வெளிநாட்டில் ஷூட்டிங் சென்றிருந்த பொது அவருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது. அப்போது அவர் மருத்துவமனை சென்று பரிசோதித்ததில் தான் அவருக்கு ஆறு மாத காலமாக மஞ்சள் காமாலை இருந்ததாக தெரியவந்தது.

6 மாசமா இந்த பிரச்சனைதான் - சீக்ரெட் டிரீட்மென்டில் இருந்த ரோபோ சங்கர் | Robo Shankar Had A Treatment For 6 Months

இது தெரிவதற்கு முன்பே அவர் அசைவம் உண்பது மற்றும் மது அருந்துவது போன்றவற்றை கைவிட்டுள்ளார். இதுவே அவர் தற்பொழுது விரைவில் குணமடைய உதவியுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.