மாமியாருக்கு உதட்டில் முத்தம்; வெடித்த சர்ச்சை - ரோபோ சங்கர் மருமகன் விளக்கம்!

Tamil Cinema Viral Video Robo Shankar
By Sumathi Apr 17, 2024 02:30 PM GMT
Report

ரோபோ சங்கர் மனைவிக்கு, அவரது மருமகன் உதட்டில் முத்தமிட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியது.

இந்திரஜா ரோபோ சங்கர்

தமிழ் சினிமா உலகில் பிரபல காமெடி நடிகனாக அறியப்படுபவர் ரோபோ சங்கர். முதலில் இவர் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி திரைப்படங்களில் தோன்றினார்.

indraja robo shankar with husband

2002ல் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இந்திரஜா என்ற மகள் உள்ளார். இந்திரஜா பிகில் படத்தின் மூலம் பிரபலமானார்.

இந்நிலையில், இவர் தன்னுடைய முறை மாமா கார்த்திக் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலருமே இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

6 மாசமா இந்த பிரச்சனைதான் - சீக்ரெட் டிரீட்மென்டில் இருந்த ரோபோ சங்கர்

6 மாசமா இந்த பிரச்சனைதான் - சீக்ரெட் டிரீட்மென்டில் இருந்த ரோபோ சங்கர்

மருமகன் விளக்கம்

அதில், வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் ரோபோ சங்கரின் மனைவிக்கு, மருமகனான கார்த்திக் உதட்டில் முத்தம் கொடுத்தார். இதுகுறித்த வீடியோ வெளியாகி மருமகன் மாமியாரிடம் இப்படியா நடந்து கொள்வது எனப் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

robo shankar family

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள கார்த்திக், நான் என்னுடைய அக்காவுக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கப் போனேன். அப்போது அவர் எதிர்பாராத விதமாக திரும்பியதால் அந்த போட்டோவில் அந்த மாதிரி வந்துவிட்டது. ஆனால் ப்ளான் பண்ணி நான் உதட்டில் முத்தம் கொடுத்து நாங்கள் புகைப்படம் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.