இந்த நோயால் தான் எனக்கு இந்த நிலை - ரோபோ சங்கர் வேதனை!

Robo Shankar
By Sumathi Jun 12, 2023 05:05 AM GMT
Report

தான் உடல்நிலை மெலிந்தது குறித்து நடிகர் ரோபோ சங்கர் மனம் திறந்துள்ளார்.

ரோபோ சங்கர் 

காமெடி, மெமிக்ரி என தனது திறமையால் பிரபலமான நடிகர் ரோபோ சங்கர். சமீபத்தில் அவரது புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் மிகவும் மெலிந்து காணப்பட்டார். அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் உடல்நல குறைவால் இப்படி மெலிந்திருக்க கூடும் என்று கவலைபட்டனர்.

இந்த நோயால் தான் எனக்கு இந்த நிலை - ரோபோ சங்கர் வேதனை! | Robo Shankar Interview About His Health

அதற்கு அவரது குடும்பத்தினர் அவர் நலமாக இருக்கிறார். படத்திற்காக உடல் எடை குறைத்தார் என்று பதிலளித்திருந்தனர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறது இதுகுறித்து ரோபோ சங்கர் மெளனம் கலைத்துள்ளார்.

மஞ்சள் காமாலை 

அதில், நான் மஞ்சள் காமாலை நோயால் அதோடு உடல் எடையை குறைத்துக்கொண்டு இருந்தேன் இரண்டும் சேர்ந்து என்னை இப்படி ஆக்கிவிட்டது. ஆனால், என் மனைவி, என் குழந்தைகள் மற்றும் என்னுடைய நண்பர்களால் நான் பழையபடி மீண்டு வந்துள்ளேன். நான் எத்தனையோ பேரை சிரிக்க வைத்து அவர்களது மனக்கஷ்டத்தை போக்கி இருக்கிறேன்.

இந்த நோயால் தான் எனக்கு இந்த நிலை - ரோபோ சங்கர் வேதனை! | Robo Shankar Interview About His Health

ஆனால் என்னுடைய மனக் கஷ்டத்தை போக்கியது விஜய் டிவி ராமர் தான். அவரின் காமெடிகளை பார்த்து பார்த்து சிரித்து தான் நான் சீக்கிரம் குணமடைந்தேன் எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவரது மனைவி பிரியங்கா, எங்கள் மகளுக்கு திருமணம் நடைபெறப்போவது உண்மைதான் அதற்கான தேதியை விரைவில் நாங்கள் அறிவிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.