ரோபோ சங்கர் மரணம் எதனால்? மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை!
நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
ரோபோ சங்கர் மறைவு
விஜய் டிவியில் வெளியான பல்வேறு நிகழ்ச்சிகளில் ரோபோ சங்கர்(46) தனது மிமிக்ரி மூலமாக பிரபலமானார். பின் மாரி உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில், சென்னையில் புதிய படப்பிடிப்பில் ரோபா சங்கர் நடித்து வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மருத்துவமனை அறிக்கை
இதுதொடர்பாக தற்போது மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரோபோ சங்கர், செப். 16 அன்று மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு குடலில் ரத்தப் போக்கு இருந்தது.
மேலும் உள் உறுப்புகள் செயலிழந்த நிலையில் வயிற்றுப்பகுதியிலும் மிக தீவிரமான பிரச்னைகள் இருந்தன. தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு எங்கள் மருத்துவர்கள் தொடர்ந்த சிகிச்சை அளித்த போதிலும் பலன் அளிக்கவில்லை.
செப் 18 அன்று இரவு 9.05 மணிக்கு உயிரிழந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது