நடிகர் ரோபோ சங்கர் மறைவு - சோகத்தில் ரசிகர்கள்!
நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
ரோபோ சங்கர்
விஜய் டிவியில் வெளியான பல்வேறு நிகழ்ச்சிகளில் ரோபோ சங்கர்(46) தனது மிமிக்ரி மூலமாக பிரபலமானார்.
பின் மாரி உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில், சென்னையில் புதிய படப்பிடிப்பில் ரோபா சங்கர் நடித்து வந்தார்.
ரசிகர்கள் அதிர்ச்சி
அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ரோபோ சங்கர் மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது அவரது ரசிகர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.