இந்திரஜா வளைகாப்பு நிகழ்ச்சியில் ரோபோ சங்கர் செய்த காரியம் - வைரலாகும் போட்டோஸ்!

Robo Shankar Viral Photos Indraja Shankar
By Vidhya Senthil Oct 21, 2024 12:30 PM GMT
Report

காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 இந்திரஜா 

 தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வருபவர் ரோபோ சங்கர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் மூலம் தன்னுடைய பயணத்தைத் தொடங்கிய ரோபோ சங்கர், தனது அசாத்திய நடிப்பால் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டார்.

indraja baby shower

இவருக்கு ப்ரியங்கா என்ற மனைவியும் இந்திரஜா சங்கர் என்ற மகள் உள்ளார்.இவரது மகள் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் இந்திரஜா நடித்து இருந்தார்.அவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது.

காதலரை கரம் பிடிக்கும் ரம்யா பாண்டியன் - மாப்பிளை யார் தெரியுமா?

காதலரை கரம் பிடிக்கும் ரம்யா பாண்டியன் - மாப்பிளை யார் தெரியுமா?

தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தனது மாமாவான கார்த்திக் என்பவரை இந்திரஜா திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.

 வளைகாப்பு 

அப்போது அந்த நிகழ்ச்சியிலேயே இந்திரஜாவின் கணவர் கார்த்திக், நாங்கள் இருவருமே அப்பா -அம்மா ஆகப் போகிறோம் என்று அறிவித்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினர். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது கர்ப்பத்தை அறிவித்த நிலையில்,

robo shankar daughter

இந்திரஜா இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐந்தாம் மாத வளைகாப்பு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். புளிப்புச் சுவை பிடித்து, குழந்தையின் இதயத்துடிப்பை அறிந்து ரசித்த நாள்... 5 ஆம் மாதம் பூச்சூடல் விழா என்ற கேப்ஷனும் பதிவிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் சமுக வளைத்தில் வைரலாகி வருகிறது.