காதலரை கரம் பிடிக்கும் ரம்யா பாண்டியன் - மாப்பிளை யார் தெரியுமா?

Ramya Pandian Marriage Tamil Actress Actress
By Karthikraja Oct 18, 2024 12:00 PM GMT
Report

 நடிகை ரம்யா பாண்டியன் அடுத்த மாதம் தனது காதலரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரம்யா பாண்டியன்

நடிகர் அருண்பாண்டியனின் அண்ணன் மகளான ரம்யா பாண்டியன், டம்மி பட்டாசு, ஜோக்கர், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், ஆண் தேவதை, நண்பகல் நேரத்து மயக்கம் என சில திரைப்படங்களில் நடித்துள்ளார். 

ramya pandiyan marriage

திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அவரது மொட்டைமாடி போட்டோஷூட் மூலமாகதான் பிரபலமானார். அதன் மூலம், பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற ஷோக்களிலும் அவர் கலந்துகொண்டார். 

3 வருஷமா ஃபாலோ பண்ணாரு; Propose வேற - காதல் குறித்து ரகசியம் பகிர்ந்த ரம்யா பாண்டியன்

3 வருஷமா ஃபாலோ பண்ணாரு; Propose வேற - காதல் குறித்து ரகசியம் பகிர்ந்த ரம்யா பாண்டியன்

காதல் திருமணம்

இந்நிலையில் ரம்யா பாண்டியன், அடுத்த மாதம் நவம்பர் 8 ஆம் தேதி தனது காதலரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் பெங்களூரில் நடத்தும் யோகா பயிற்சியில் ரம்யா பாண்டியன் கலந்து கொண்டார். அங்கு யோகா ஆசிரியராக இருந்த லவ்ல் தவான்(lovel dhawan) என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. 

ramya pandiyan marriage

லவ்ல் தவான் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். ரம்யா பாண்டியன், தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர். இரு குடும்பத்தின் ஒப்புதலுடன் இமயமலையில் உள்ள ரிஷிகேஷில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது.