3 வருஷமா ஃபாலோ பண்ணாரு; Propose வேற - காதல் குறித்து ரகசியம் பகிர்ந்த ரம்யா பாண்டியன்
கல்லூரி கால காதல் கதை குறித்து நடிகை ரம்யா பாண்டியன் பேசியுள்ளார்.
ரம்யா பாண்டியன்
தமிழ் சினிமாவில் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துக்கொண்டார். ரம்யா, ஃபோட்டோ ஷூட்டிற்கு பெயர் போனவர் என்பது அனைவரும் அறிந்ததே.. சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாகவே இருப்பார்.
கல்லூரி காதல்
தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் தினமும் கல்லூரிக்கு போகும் போது பேருந்து நிலையத்தில் ஒருவர் நின்று கொண்டு இருப்பார்.
கல்லூரிவிட்டு திரும்பி வரும் போதும் நின்று கொண்டு இருப்பார். இப்படியே மூன்று வருடமாக என்னை அவர் பாலோ செய்து கொண்டே வந்தார். ஒரு நாள் அவர் என்னிடம் propose பண்ணாரு மனசுக்குள் பயம் இருந்தாலும், வெளியில் அதை காட்டிக்கொள்ளாமல், முடியாது என்று சொல்லிவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.