காதல் கல்யாணம் தான்.. அது பிடித்தால் தான் பண்ணிப்பேன் - ரம்யா பாண்டியன் பளீச்
தனது திருமணம் குறித்து நடிகை ரம்யா பாண்டியன் வெளிப்படையாக பேசியுள்ளார்.
ரம்யா பாண்டியன்
தமிழ் சினிமாவில் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
ரம்யா, ஃபோட்டோ ஷூட்டிற்கு பெயர் போனவர் என்பது அனைவரும் அறிந்ததே.. தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.
திருமணம்
இந்நிலையில் தன்னுடைய திருமணம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தற்போது தன்னுடைய வாழ்க்கையில் யாருடனும் தான் கமிட்டாகவில்லை, தான் சிங்கிள்தான்.
ஒருவரின் லுக் எனக்கு பிடித்தால்தான் அவரை வாழ்க்கைத்துணையாக ஏற்பேன். குறிப்பாக அவரது கண்கள் தனக்கு பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.