அந்த பழக்கத்திற்கு எங்க அப்பா அடிமையாகிட்டார் - ரோபோ சங்கர் மகள் பரபரப்பு பேட்டி..!

Thahir
in பிரபலங்கள்Report this article
அண்மை மாதங்களாக நடிகர் ரோபோ சங்கர் உடல் நிலை மெலிந்த தோற்றத்துடன் காணப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் உண்மை காரணத்தை அவரது மகள் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கலக்கும் ரோபோ சங்கர் குடும்பம்
விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு? என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் ரோபோ சங்கர் தன்னுடைய அசாத்திய காமெடி திறமையால் அனைவரையும் சிரிப்பலைகளில் ஆழ்த்தினார்.
தற்போது தமிழ் சினிமாவில் நடித்து வரும் இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.
இவர் தமிழ் சினிமாவில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி, புலி போன்ற திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.
இவரது மனைவி பிரியங்காவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.
இவர்களது மகளான இந்திரஜாவும் தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மாவாக நடித்து பிரபலமானார்.
எங்க அப்பா மது பழக்கத்தினால் இப்படி ஆயிட்டாரு
கடந்த சில மாங்களுக்கு முன்பாக மெலிந்த தோற்றத்துடன் ரோபோ சங்கர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில், ரோபோ சங்கரின் உடல் நிலை குறித்து பலவேறு வதந்திகளும் பரவின.
தற்போது அவர் உடல் நிலை பாதிப்பில் இருந்து மெல்ல, மெல்ல மீண்டு வருகிறார். இந்நிலையில், தனது தந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதில், கடந்த சில மாதங்களாகவே எனது அப்பா மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். இதனால் அவருக்கு உடல்நிலை பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுவிட்டது.
இப்போது மதுப்பழக்கத்தில் இருந்து மீண்டு புதிய வாழ்க்கையை அப்பா வாழ்ந்து வருகிறார்.
இதுபோன்ற பழக்கங்களை இளம் தலைமுறையினர் தவிர்க்க வேண்டும் இவ்வாறு இந்திரஜா தெரிவித்துள்ளார்.