ரோபோ சங்கர் மகள் இந்திரஜா திருமணம் - முதலமைச்சர், கமல்ஹாசன் எனப் பலருக்கு அழைப்பு!
இந்திரஜா திருமண தகவல் வைரலாக பரவி வருகிறது.
இந்திரஜா திருமணம்
காமெடி, மெமிக்ரி என தனது திறமையால் பிரபலமானவர் நடிகர் ரோபோ சங்கர். அவருடைய மகளான இந்திரஜா சங்கரும் விஜய் டிவி நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகி தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், இந்திரஜாவின் உறவினரான கார்த்திக் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தார். கார்த்திக் `தொடர்வோம்' என்கிற பெயரில் தன்னார்வல அறக்கட்டளையை நிறுவி பல குழந்தைகளை வளர்த்து வருகிறார்.
அழைப்பிதழ்
தற்போது, ரோபோ சங்கர் தனது குடும்பத்தினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமணா அழைப்பிதழை வழங்கியுள்ளார்.
தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசனையும் மணமக்களுடன் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்த புகைப்படத்தை அவர்களுடைய சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தனர்.
இதன்மூலம், திருமணம் தொடர்பான அப்டேட்களை விரைவிலேயே அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.