இதனால் தான் அப்படி இருக்கிறார் - ரோபோ சங்கர் உடல்நிலை குறித்து உண்மை உடைத்த மகள்
மிமிக்ரி, காமெடியால் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தவர் ரோபோ சங்கர்.
ரோபோ சங்கர்
தனது நடிப்பு திறமையால் மக்கள் மனதில் இடம்பிடித்தார். இந்நிலையில் திடீரென உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் அவர் உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டதாக பேசி வந்தனர். இதுகுறித்து ரோபோ சங்கரின் அண்ணன் மகள் இந்து சிவராமன் என்கிற பொன்னழகி,
நான் கடந்த 8 ஆண்டுகளாக சித்தப்பா ரோபோ சங்கருடன் இருக்கிறேன். நான் ஒரு பிசினஸையும் செய்து வருகிறேன். நான் யாருடைய சிபாரிசும் இல்லாமல் என் வாழ்க்கையில் முன்னேறி வருகிறேன். சித்தப்பாவுக்கு ஒரு மகளா, இரு மகள்களா என மற்றவர்கள் கன்பியூஸ் ஆகும் அளவுக்கு எனக்கும் சித்தப்பா- சித்திக்கும் நிறைய பாண்டிங் இருக்கிறது.
உடல்நிலை
மேலும் இந்திரஜா என அவருடைய பெண்ணின் பெயர் இருப்பதால் எனது பெயர் இந்து என்பதால் பல குழப்பமடைவர். எனக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் வாய்ப்பு தானாக வர வேண்டும், நானாக போய் நான் ரோபோவின் அண்ணன் மகள் என கூறி வாய்ப்பு கேட்க எனக்கு பிடிக்கவில்லை.
நடுவுல ஒரு படத்திற்காக சித்தப்பா வெயிட் லாஸ் செய்தார். அது மட்டுமல்லாமல் ஒரு ஆண்டாக வெயிட் லாஸில்தான் இருந்தார். ஒரு ஈவன்ட்டிற்காக வேறு வேறு ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு லைட்டாக ஜான்டிஸ் வந்ததை நாங்கள் கவனிக்கவில்லை.
அதனால் அவர் பார்ப்பதற்கு கொஞ்சம் டிரையாக இருப்பது போல் இருக்கிறது. மற்றபடி நெட்டிசன்கள் கிளம்பும் ரூமரை போல் அவருக்கு உடல்நலக் குறைவு எல்லாம் இல்லை. நன்றாக ஆரோக்கியமாக இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.