சிஎஸ்கே செய்தது பெரிய தவறு.. எதற்கும் எல்லை இருக்க வேண்டும் - கொதித்த ராபின் உத்தப்பா!
சிஎஸ்கே செய்தது பெரிய தவறை ராபின் உத்தப்பா சுட்டிக்காட்டியுள்ளார்.
சிஎஸ்கே
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த அண்டு ஏப்ரலில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. அதற்கான மெகா ஏலம் இந்த மாதம் 24, 25 ஆகிய தினங்களில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற இருக்கிறது.
இது தொடர்பாக திகாரப்பூர்வ அறிவிப்பையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.முன்னதாக 10 அணிகளும், தங்கள் அணியில் தக்கவைப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இந்த முறை நடைபெற உள்ள மெகா ஏலத்தில் பல முன்னணி வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
அதில் சென்னை அணியை பொருத்தவரை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மதீஷ பத்திரனா, எம்.எஸ் தோனி ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர். பல எதிர்பார்ப்பிற்கு பிறகு தோனி விளையாடுவது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திராவை தங்கள் அகாடமியில் பயிற்சி பெற அனுமதித்ததற்காக முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா சென்னை சூப்பர் கிங்ஸை சாடியுள்ளார்.
ராபின் உத்தப்பா
இது குறித்து அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில் பேசுகையில், “ரச்சின் ரவீந்திரா இங்கு வந்து சிஎஸ்கே அகாடமியில் பயிற்சி மேற்கொண்டார். சிஎஸ்கே ஒரு அற்புதமான அணியாக உள்ளது,
அது எப்போதும் அதன் வீரர்களைக் கவனித்துக் கொள்ளும். ஆனால் ஒரு வெளிநாட்டு வீரர் இந்திய அணியை எதிர்த்து விளையாடும்போது, அவர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது, நாட்டின் நலன் முன்னோக்கி இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், சிஎஸ்கே எப்பொழுதும் தங்கள் வீரர்களை கவனித்துக்கொள்வதில் எனக்கு ஆச்சரியமில்லை. நான் சிஎஸ்கேவை முற்றிலும் நேசிக்கிறேன், ஆனால் நாடு என்று வரும்போது, ஒரு கோடு இருக்க வேண்டும்.
என்று விளாசியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு ரச்சின் ரவீந்திரா முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.