'சந்தோஷமா இருக்கேன்' - 80 வயதில் 7-வது குழந்தைக்கு தந்தையான பிரபல நடிகர்!

United States of America Actors Hollywood World
By Jiyath Jan 30, 2024 05:54 AM GMT
Report

80 வயதில் மகளை வளர்ப்பது மகிழ்ச்சியாக உள்ளதகா ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ தெரிவித்துள்ளார்.

ராபர்ட் டி நீரோ

ஹாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் ராபர்ட் டி நீரோ (80). இவர் ரேஜிங் புல், தி காட்பாதர் பார்ட் II, டாக்ஸி டிரைவர், குட் ஃபெல்லாஸ், ஐரிஷ்மேன் என பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும், 2 முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்றுள்ளார். இந்நிலையில் 'அபவுட் மை ஃபாதர்' என்ற படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில், அவரது 6 குழந்தைகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

வேலையாளை செருப்பால் கொடூரமாக தாக்கிய பிரபல பின்னணி பாடகர் - வைரலாகும் Video!

வேலையாளை செருப்பால் கொடூரமாக தாக்கிய பிரபல பின்னணி பாடகர் - வைரலாகும் Video!

7 குழந்தைகள் 

அதற்கு பதிலளித்த ராபர்ட் டி நீரோ "6 இல்லை இப்போது எனக்கு 7 குழந்தைகள் உள்ளன. 80 வயதில் மகளை வளர்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

என் குழந்தையின் முகத்தை பார்க்கும்போது எனது கவலைகள் அனைத்தும் மறைந்து விடுகின்றன. என்னால் முடிந்த வரை அவளுடன் நாட்களை செலவிடுவேன்.

நான் கவலைப்படும் விஷயங்கள் எல்லாம் அவளைப் ஏற்கும்போது மறந்துவிடும். எனக்கு அதுவே அதிசயமானது. என்னால் முடிந்தவரை அவளை ரசிக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.