வேலையாளை செருப்பால் கொடூரமாக தாக்கிய பிரபல பின்னணி பாடகர் - வைரலாகும் Video!

Pakistan World
By Jiyath Jan 28, 2024 10:50 AM GMT
Report

வேலையாள் ஒருவரை பின்னணி பாடகர் ரஹத் ஃபதே அலிகான் கடுமையாக தாக்குவது போன்ற வீடியோ வெளிவந்து வைரலாகி வருகிறது

பின்னணி பாடகர் 

பாகிஸ்தான் நாட்டின் பிரபல பின்னணி பாடகராக அறியப்படுபவர் ரஹத் ஃபதே அலிகான். பல பாலிவுட் படங்களில் பாடியுள்ள இவர், பல மெகா தொடர்களுக்கும் பின்னணி இசையமைத்துள்ளார்.

வேலையாளை செருப்பால் கொடூரமாக தாக்கிய பிரபல பின்னணி பாடகர் - வைரலாகும் Video! | Pakistan Popular Playback Singer Assaults Worker

இந்நிலையில் வீட்டில் வேலையாள் ஒருவரை அவர் கடுமையாக தாக்குவது போன்ற வீடியோ வெளிவந்து வைரலாகி வருகிறது. அதில், அந்த நபரிடம் மதுபானம் வாங்கி வரும்படி வலியுறுத்தி காலணியால் அவரை தலையிலும், உடலிலும் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

விளக்கம் 

கன்னத்தில் அறையவும் செய்கிறார். பாகிஸ்தான் இசைத் துறையில் அவரது செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது மனிதநேயம் அற்ற செயல் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வேலையாளை செருப்பால் கொடூரமாக தாக்கிய பிரபல பின்னணி பாடகர் - வைரலாகும் Video! | Pakistan Popular Playback Singer Assaults Worker

ஆனால் மதுபானம் கொண்டு வர கூறவில்லை என்றும் மந்திரங்கள் உச்சரிக்கப்பட்ட புனிதநீர் நிறைந்த பாட்டிலையே கொண்டு வர கூறினேன் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.