79 வயதில் 7வது குழந்தைக்கு தந்தையான பிரபல நடிகர்!

Hollywood
By Sumathi May 10, 2023 09:37 AM GMT
Report

நடிகர் ராபர்ட் டி நிரோ ஏழாவது குழந்தைக்கு தந்தையாகி இருப்பதாக அறிவித்துள்ளார்.

 ராபர்ட் டி நிரோ

ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் ராபர்ட் டி நீரோ (79). ‘ரேஜிங் புல்’, ‘காட்ஃபாதர் 2’, ‘டாக்ஸி டிரைவர்’, ‘குட்ஃபெல்லாஸ்’, ‘ஐரிஷ்மேன்’ என ஏராளமான படங்களில் நடித்து புகழ்பெற்றவர். நடிப்பிற்காக இரண்டு முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறார்.

79 வயதில் 7வது குழந்தைக்கு தந்தையான பிரபல நடிகர்! | Robert De Niro Becomes Father To Seventh Child

தற்போது, ‘அபவுட் மை ஃபாதர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 26 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் விளம்பரப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் கலந்துக்கொண்டு பேசிய அவர், “ குழந்தைகள் பிறப்பதை சட்டம் வகுத்து கட்டுப்படுத்த முடியாது.

7 குழந்தைகள்

அது எனக்கு மட்டுமின்றி எந்த பெற்றோருக்கும் பிடிக்காது. எனக்கு ஏழாவது குழந்தை சமீபத்தில் தான் பிறந்தது. ஏழு குழந்தைகளுக்கு தந்தையான போதிலும் மேலும் குழந்தை பெற்றுக் கொள்வதை நான் விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

79 வயதில் 7வது குழந்தைக்கு தந்தையான பிரபல நடிகர்! | Robert De Niro Becomes Father To Seventh Child

டியான்னே அபோட் என்பவரை 1976 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ட்ரேனா, ரஃபேல் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 1988ல் பிரிந்துவிட்டனர்.

தொடர்ந்து, மாடல் டூக்கி ஸ்மித் என்பவரை திருமணம் செய்த நிலையில் இரட்டை மகன்களான ஜூலியன் மற்றும் ஆரோன் பிறந்தனர். அதன்பின் நீரோ கிரேஸ் ஹைடவருடன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த ஜோடிக்கு எலியட், ஹெலன் கிரேஸ் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.