செல்போனில் தினுசாக பேசி மசாஜுக்கு அழைத்த இளம்பெண்கள்.. மயக்கத்தில் சென்ற வாலிபருக்கு நேர்ந்த கொடுமை!
இளம்பெண்கள் மசாஜுக்கு அழைத்து செய்த காரியம் அதிற்சியை ஏற்படுத்தியுள்ளது.
மசாஜ் கொள்ளையர்கள்
சென்னையில் மசாஜ் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து நைசாக பேசி ஆண்களை அழைத்து குறைந்த செலவில் மசாஜ் செய்கிறோம், அழகிய நன்கு படித்த இளம்பெண்கள் மசாஜ் செய்து விடுவார்கள், மசாஜ் மட்டும் அல்ல, தேவைப்பட்டால் அவர்கள் உங்களை உல்லாச உலகத்துக்கும் அழைத்து செல்வார்கள் என்று கூறி அழைத்து கொள்ளை அடிக்கின்றனர்.
இதில் பாதிக்கப்பட்ட கார்த்திக் (வயது 29) நுங்கம்பாக்கம் கோபால் நகரைச் சேர்ந்தவர். இவருக்கும் செல்போனில் மசாஜ் செய்கிறோம், வாருங்கள் என்று அழைப்பு வருகிறது. நுங்கம்பாக்கம், குமரப்பா தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வருமாறு அழைத்துள்ளனர். அங்கு சென்ற அவரை ஒரு அறையில் அடைத்து வைத்து கத்தி முனையில் மிரட்டி அவர் அணிந்த செயின் பணத்தை பிடுங்கிவிட்டு கிரெடிட் கார்டை பிடுங்கி அதன் மூலம் ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்தையும் பறித்துள்ளனர்.
கொள்ளை
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கார்த்திக் நுங்கம்பாக்கம் போலீசுக்கு உடனே தகவல் கொடுத்தார். போலீஸ் படையினர் குமரப்பா தெருவில் உள்ள குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கு சென்றால், அந்த வீட்டில் யாரும் இல்லை. கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த மசாஜ் கொள்ளையர்களை கைது செய்யும்படி, போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய்ரத்தோர் உத்தரவிட்டார்.
தேடுதல் வேட்டையில் மசாஜ் கொள்ளை கும்பலைச் சேர்ந்த கோவை கார்த்திகேயன் (23), கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த விக்கி (24) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.55 ஆயிரம் பணம் மற்றும் தங்க நகைகள் மீட்கப்பட்டது. மேலும், இந்த கும்பலை சேர்ந்த சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.