முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளை - காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம்
சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை விவகாரம் தொடர்பாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கமளித்துள்ளார்.
வங்கி கொள்ளை
அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் ஃபெட் நகைக்கடன் நிறுவனத்தின் கிளையில், இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர், காவலாளி மற்றும் ஊழியர்களை கட்டிப்போட்டு 20 கோடி ரூபாய் மதிப்பிலான, 32கிலோ நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஏற்கனவே பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் கைது செய்யப்பட்ட நிலையில்,
சங்கர் ஜிவால் விளக்கம்
அரும்பாக்கம் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் முக்கிய நபரான ஊழியர் முருகன் சென்னை திருமங்கலத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கடந்த 10 நாட்களாக கொள்ளைக்கு திட்டம் தீட்டியுள்ளனர்.
குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்தும், சிசிடிவி கேமராவில் ஃஸ்ப்ரே அடித்தும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். 7 பேர் கொண்ட குழுவினர் கொள்ளை சம்பவத்திற்கான திட்டம் போட்டுள்ளனர்.
7 பேர் கொண்ட குழு
ஒரே பள்ளியில் பயின்றவர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. துப்பாக்கி முனையில் கொள்ளை நடைபெறவில்லை, கொள்ளையர்கள் கத்தி வைத்திருந்தனர், ஆனால் அதை பயன்படுத்தவில்லை.
அவர்கள் மீது எந்த ஒரு குற்ற வழக்குகளும் இல்லை. 13ம் தேதி வங்கியில் 31.7 கிலோ அடமானம் வைத்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது, கூடுதல் ஆணையர் அன்பு தலைமையில் 11 குழு அமைக்கப்பட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டு,
முதற்கட்டமாக 18 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் மீதம் 14கிலோ நகைகளை கைப்பற்றி விடுவோம் என தெரிவித்துள்ளார்.