அரும்பாக்கம் வங்கி கொள்ளை - முக்கிய கொள்ளையன் முருகன் கைது

Chennai Crime
By Sumathi Aug 15, 2022 06:20 AM GMT
Report

அரும்பாக்கம் ஃபெட் கோல்டு லோன்ஸ் வங்கி கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்கி கொள்ளை 

அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் ஃபெட் நகைக்கடன் நிறுவனத்தின் கிளையில், இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர், காவலாளி மற்றும் ஊழியர்களை கட்டிப்போட்டு 20 கோடி ரூபாய் மதிப்பிலான, 32கிலோ நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

அரும்பாக்கம் வங்கி கொள்ளை - முக்கிய கொள்ளையன் முருகன் கைது | Arumbakkam Bank Robbery

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று அரும்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கூடுதல் ஆணையர் அன்பு மற்றும் துணை ஆணையர் விஜயகுமார் நேரில் ஆய்வு நடத்தினர்.

முருகன் கைது

முதற்கட்ட விசாரணையில் வங்கியில் வேலை பார்த்த நபர்களே கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.இதில், கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது, நிறுவனத்தின் ஊழியர் முருகன் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

அரும்பாக்கம் வங்கி கொள்ளை - முக்கிய கொள்ளையன் முருகன் கைது | Arumbakkam Bank Robbery

இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஏற்கனவே பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் கைது செய்யப்பட்ட நிலையில்,

அரும்பாக்கம் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஊழியர் முருகன் சென்னை திருமங்கலத்தில் கைது செய்யப்பட்டார்.