ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை - 100 சவரன் நகைகள் திருட்டு!
பிரபல நகைக்கடையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோஸ் ஆலுக்காஸ்
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் ஊழியர்கள் கடையை திறந்து பார்த்த போது நகைகள் திருடு போனது தெரியவந்தது.
உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆய்வில் ஏசி வென்டிலேட்டர் மூலம் கடைக்குள் நுழைந்த மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
100 சவரன் திருட்டு
அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். நகைகள் திருடுபோனதை அடுத்து அந்த நகைக்கடை தற்போது மூடப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் சுமார் 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கொள்ளையர்களை 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.