பட பாணியில் திட்டமிட்ட கொள்ளை.. சுவற்றில் துளையிட்டு ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகள் அப்பேஸ்!

Delhi Crime
By Vinothini Sep 27, 2023 06:04 AM GMT
Report

நகைக்கடையில் சுவற்றை துளையிட்டு ரூ.25 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை

டெல்லி, ஜங்க்புரா மாவட்டத்தின் போகல் பகுதியில் பிரபல நடைக்கடையான உம்ராவ் ஜுவல்லர்ஸ் உள்ளது. இந்த நகைக்கடையில் திங்கட்கிழமை அன்று விடுமுறை, கடந்த ஞாயிற்றுக்கிழமை கடை மூடியபிறகு கொள்ளையர்கள் கடையின் மேற்கூரை வழியாக கொள்ளையர்கள் கடைக்குள் நுழைந்து கடையின் சிசிடிவி கேமிராக்களை செயலிழக்க செய்த பிறகு,

robbers-looted-rs-25-crore-priced-jewels

தரைதளத்தில் இருக்கும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு பெட்டக அறையில் துளையிட்டிருக்கிறார்கள். அங்கு வைக்கப்பட்டிருந்த நகைகளையும், ஷோ ரூமில் இருந்த நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

100 நாள் திட்டத்தில் வேலைசெய்யும் பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வைத்த இளைஞர்!

100 நாள் திட்டத்தில் வேலைசெய்யும் பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வைத்த இளைஞர்!

போலீஸ் விசாரணை

இந்நிலையில், வழக்கம் போல நேற்று காலை கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் திறந்து பார்த்துள்ளனர். அப்பொழுதிது அங்கு வெறும் தூசியாக இருந்துள்ளது, மேலும் வைக்கப்பட்டிருந்த நகைகள் அனைத்தும் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார், அங்கு வந்த போலீசார் விசாணையில் கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமராவை செயலிழக்க செய்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

robbers-looted-rs-25-crore-priced-jewels

இவர்கள் செயலிழக்க செய்யும் முன்பு வரை கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சிகளையும், தடயவியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு, சுமார் ரூ. 25 கோடி இருக்கும். போலீசார் தடயவியல் பரிசோதனை மற்றும் சிசிடிவி கேமராக்களில் உள்ள காட்சிகளை மதிப்பாய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.