Wednesday, Jul 9, 2025

என்ன ஒரு புத்திசாலிதனம்..புறாக்களை ஏவி நூதன முறையில் கொள்ளை - சிக்கிய கொள்ளையன்!

Karnataka India Crime
By Swetha 9 months ago
Report

புறாக்களை ஏவி நூதன முறையில் நபர் ஒருவர் கொள்ளையடித்துள்ளார்.

புறா

கர்நாடக மாநிலம் நகரத்பேட்டையைச் சேர்ந்த மஞ்சுநாதன் என்பவர் நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது போலீசிடம் வசமாக சிக்கியுள்ளான். புறாக்களை பயன்படுத்தி தான் கொள்ளையடிக்கும் முறை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளான்.

என்ன ஒரு புத்திசாலிதனம்..புறாக்களை ஏவி நூதன முறையில் கொள்ளை - சிக்கிய கொள்ளையன்! | Robber Uses Pigeon To Break A House And Rob

அந்த நபர் ஒவ்வொரு முறை கொள்ளையடிக்க செல்லும்போதும், புறாக்களை தன்னுடன் எடுத்துச் செல்வது வழக்கம். அப்போது, வீடுகளை நோட்டமிடும் மஞ்சுநாதன், இலக்கை எட்டியவுடன் சம்பந்தப்பட்ட வீட்டின் மீது இரண்டு புறாக்களை விடுவிப்பான்.

வீட்டில் உடம்பு சரியில்லை.. 1 மாதத்தில் தந்து விடுகிறேன் - கடிதம் எழுதிய கொள்ளையன்!

வீட்டில் உடம்பு சரியில்லை.. 1 மாதத்தில் தந்து விடுகிறேன் - கடிதம் எழுதிய கொள்ளையன்!

கொள்ளையன்

அந்த பறைவைகள் பெரும்பாலான நேரம் கூரை அல்லது பால்கனிக்கு பறந்து, சிறிய கவனத்தை ஈர்க்கும். ஆர்வமுள்ள குடியிருப்பாளர்கள் புறாக்களை எதிர்கொண்டால், மஞ்சுநாதன் அங்கு செல்வதில்லை.

என்ன ஒரு புத்திசாலிதனம்..புறாக்களை ஏவி நூதன முறையில் கொள்ளை - சிக்கிய கொள்ளையன்! | Robber Uses Pigeon To Break A House And Rob

ஒரே வேளை புறாவை யாரும் நெருங்கவில்லை எனில், வீட்டில் புகுந்து கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளான். பூட்டிய வீட்டை அடையாளம் கண்டவுடன், மஞ்சுநாத் இரும்பு கம்பியை பயன்படுத்தி கதனை உடைத்து உள்ளே புகுந்து

, தங்க நகைகள் மற்றும் பணத்தை குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு, நகரம் முழுவதும் குறைந்தது 50 கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.